ஒரு வருடம் வேகமாக ஓடியது. அவன் கல்லூரியிலேயே சான்ட்ராவுக்கு இடம் கிடைத்தது. ஆன்ட்ரூவின் இரண்டாம் ஆண்டு பி ஜி வருடம், சான்ட்ராவின் பி.ஜி முதல் வருடத்துக்காக செலவானது. எம் ஃபில் படித்தால் தான் இன்னும் ஒரு வருடம் அவளுடன் கல்லூரி போக முடியும் என்பதால் நன்றாகவும் படித்தான். அவளுக்காக அவன் செலவிட்ட நேரங்களை இரவில் விழித்திருந்து சரிக்கட்டினான். நல்ல மார்க்குகளும், ப்ராஜக்ட்களில் வெற்றிகளும் நல்ல பெயரும் கிடைக்கும் போது தான் அவன் ஒரு தியரியைக் கண்டுபிடித்தான். “காதலின் உற்சாகம் நல்ல மார்க்குகளை வாங்கித்தரும்.”

சான்ட்ரா பிஜி இரண்டாம் வருடம் படிக்கும் போது ஆன் ட் ரூ எம் ஃபில்லுக்காக சேர்ந்தான் அதே கல்லூரியில்.

அப்போது தான் ஒரு பிப்ரவரி 14 ஆம் நாள், இதற்கு மேல் சஸ்பென்ஸ் தாங்க முடியாது என்று நினைத்து, சான்ட்ராவிடம் “எங்கயாச்சும் சாப்பிடப் போகலாம்” என்று அழைத்தான்.

“ட்ரீட் என்னோடதுன்னா வர்றேன்” சான்ட்ராவின் சம்மதமே பெரிதாகத் தெரிந்தது ஆன்ட்ரூவுக்கு.

“ஓக்கே. ஐஸ் க்ரீம் என்னோட செலவு” என்றான்.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள் சான்ட்ரா, “ரெண்டு நாளா உன்ன நான் க்ளோஸா வாட்ச் பண்ணிட்டு இருந்தேன். இன்னிக்கு என்னப் ப்ரப்போஸ் பண்ணப் போறன்னு என்னோட இன்ஸ்டிங்ட் சொல்லிச்சுது. நானும் உனக்குத் தெரியாம உன்ன ஃபாலோ பண்ணினேன். ரெட் ரோஸ் வாங்கினதப் பாத்தேன். கார்ட் ஷாப்புக்குப் போனதப் பாத்தேன். ஐ’ம் சாரி ட்டு டிஸ்ஸப்பாய்ன்ட் யூ. உங்கூட நான் காலேஜ்ல சுத்திட்டு இருந்ததுக்குக் காரணம். என்னோட பழைய தப்ப நான் செஞ்சிடக் கூடாதுன்னு தான். எனக்கு என் மேலயே கோபம் இன்னும் தீரல. ஏற்கனவே ஒருத்தன லவ் பண்ணுன ஒருத்தி உனக்கு வேணாம் ஆன்ட்ரூ. நான் மனசார சொல்றேன், நான் உனக்குத் தகுதியானவ இல்ல. உன் மனசுக்குள்ள நான் தப்பான நம்பிக்கைய வளத்துடக்கூடாதுன்னு தான் இன்னிக்கு உன் கூட சாப்பிட வர ஒத்துக்கிட்டேன். ப்ளீஸ் என்னப் புரிஞ்சுக்கோ.”

“சான்ட்ரா, எனக்கு எல்லாமே புரியுது. என்னயும் ரெண்டு நிமிஷம் பேச விடு. அப்புறமா நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்கிறேன்.”

“ஓ கே கோ அஹெட்.”

“நான் கடவுளுக்கு முன்னால சொல்றேன், எனக்கு அந்தக் காலத்துல இருந்த மாதிரி உன் மேல எனக்கு லவ் இல்ல. ஆனா, உனக்கு நான், எனக்கு நீ தான் பொருத்தம்னு நான் ஸ்ட்ராங்கா நம்புறேன். உனக்கே தெரியும், நான் எந்த அளவுக்கு ஸ்பிரிச்சுவலா இருக்கேன்னு. நான் செல்ஃபிஷ் தான். ஆனா என்ன நான் அன்பு செய்யாம மத்தவங்கள அன்பு செய்ய முடியாது. ஜீசஸ் சொன்ன மாதிரி என்ன நான் நேசிக்கிற அளவுக்குத் தான் மத்தவங்கள நாம் நேசிக்க முடியும். நான் ரொம்ப யோசிச்சு, பைபிள ஸ்டடி பண்ணி, ஜெபம் பண்ணி தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இது கண்டிப்பா டீன் ஏஜ் இன்ஃபாச்சுவேஷன் இல்ல. நான் எம் ஃபில் பண்றேன். நீயும் பி ஜி பண்ற. டீன் ஏஜ்ல உன்னோட இன்ஃபாச்சுவேஷன்ல நடந்த ஒரு சின்னத் தடுமாற்றம் எனக்கு நல்லாவே தெரியும். அது ஒண்ணுமே இல்ல. நீயும் இங்க காலேஜ்ல நடக்கறத எல்லாம் பாத்துட்டுத் தானே இருக்கிற? நாம ரெண்டு பேரும் ஒவ்வொரு புதன் கிழமையும் பைபிள் ஸ்டடியிலயும், ப்ரேயர்லயும் ஒண்ணா வளந்திருக்கோம். சொந்தக்காரங்க அப்படிங்கறத விட ஒண்ணா ஒரே ஃபெல்லோஷிப்ல வளந்தவங்கன்னு பாத்தா, நமக்கு ஜோடிப் பொருத்தம் நல்லாவே இருக்குது. ஒருத்தர ஒருத்தர் நல்லாவே புரிஞ்சிருக்கோம், புரிஞ்சுக்குவோம். நல்ல ஜோடியா, நல்ல குடும்பத்த நடத்த முடியும். முன்னப் பின்ன தெரியாதவங்க கூட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாம சொல்ல முடியாது. ரிஸ்க் தான். உங்க அண்ணன் அண்ணி மாதிரி, செல்லராஜ் அண்ணன் – அண்ணி மாதிரி. இதுக்கு மேல உன்னோட விருப்பம். நான் ஓப்பனா என்னோட கனவு, ஆசை, ப்பாஷன், ப்ரேயர் எல்லாத்தையும் வெட்கம் இல்லாம சொல்லிட்டேன். நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். நோ ப்ரஷ்ஷர், நோ ஆப்ளிக்கேஷன்ஸ். நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். நான் இப்போ சொல்ற அளவுக்கு ஸ்ட்ராங்கா உன்னால எனக்கு எதிரா ஆர்க்யு பண்ண முடியாது.”

“எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா?”

“ரெண்டு வாரம் கூட எடுத்துக்கோ.”

***

சரியாக இரண்டாவது நாள் வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தான் ஆன்ட்ரூ, “???”

பதில் வந்தது, “ஒருத்தர் ரெண்டு வாரம்னாலும் பரவால்லன்னு சொல்லிருந்தார் ?!”

“ஓகே”

மூன்றாம் நாள் காலை சான்ட்ராவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது…

“பேசணும், சன்டே மெரினா பீச்ல. டீட்டெய்ல்ஸ் அப்புறம் அனுப்புறேன்”

அந்த இரண்டு நாட்கள் இரவு மட்டும் தான் சாப்பிட்டான் ஆன்ட்ரூ…. ஃபாஸ்ட்டிங்.

பீச் போவதற்கு முந்திய சனிக்கிழமையும் ஃபாஸ்ட்டிங் தான்.

ஆன்ட்ரூவைப் பொருத்தவரை ஃபாஸ்ட்டிங் என்றால் பட்டினி அல்ல. ஜெபமும் வேத தியானமும் இருந்தால் தான் சாப்பிடாமல் இருப்பது ஃபாஸ்ட்டிங்.

“கர்த்தரின் சித்தம் அறிவது எப்படி?” என்ற புத்தகங்களையும் வாசித்தான். வாங்கி வைத்திருந்த காதல், திருமணம் பற்றிய சில பிரபல புத்தகங்களையும் மறுபடியும் படித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *