"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்," "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" இந்தக் கூற்றுக்களெல்லாம் சுய உதவிக் குழுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், சமூக சேவைக் குழுக்கள் ஆகியவறால் சிறிது உயிர்பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். ஆனாலும் பெரும்பாலான மக்கள் மாக்களாகத் தான் தொடர்ந்து கொண்டுவருகின்றனர். நேற்று ஒரு கடையில் மனுக்களை பிரதியெடுக்க ஒரு மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட்டம் கூடினால் தான் அரசாங்கம் திரும்பிப் பார்க்கிறது என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சி தந்தது. மக்கள் சக்தி பெருகுகிறதே என்ற மகிழ்ச்சி அது. ஆனால் அடுத்த வார்த்தை என்னை கலங்கடித்துவிட்டது. "கூட்டத்துல உக்காந்திருக்கவங்க கிட்ட ஏன் மறியல் செய்றீங்கன்னு கேட்டா, முன்னால நிக்கிறவங்க கிட்ட கேளுங்கன்னு சொல்லிடுறாங்க" இங்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரவில்லை. பணம் தான் பேசுகிறது. பெரிய அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். சின்ன அரசியல்வாதிகள் கவனத்தைத் திருப்புவதற்காக பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். தேர்தல் நெருங்கும் போது தான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி அரசியல் தலைவர்களுக்கு அக்கறை வரும். அதுவும் இதுவரை அக்கறை இல்லாதவர்கள் எல்லாரும் சில தீக்குளிப்புகள், மக்களின் அனுதாபம் இவற்றைப் பார்த்த பின் தங்களுக்கும் இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். பல தலைவர்கள் உண்மையான அக்கறை இருக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மை மக்கள் எங்கே சாய்கிறார்களோ அங்கே தான் அக்கறையும் இருக்கிறது. மக்களுக்கு சக்தி இருக்கிறது. பல நேரங்களில் அது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது அல்லது பெருச்சாளிகளால் திருடப்பட்டு பணமாக்கப்படுகிறது.
This is very nice Anna. Keep it up.
Election time is a good collection time
Great true story clearly told