ஃப்ரான்ஸ் காஃப்காவின்

சிறு உவமை

“ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன்.  அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அப்புறமா இந்த சுவர்களும் திடீர்னு குறுகிப் போயிருச்சு. நானும் அதுக்குள்ள கடைசி சின்ன அறைக்குள்ள வந்துட்டேன். மூலையில ஒரு பொறி இருக்குது. அதுக்குள்ள நேராப் போக வேண்டியது தான்” என்று எலி சொன்னது.   “நீ போற வழிய மாத்தணும் அவ்வளவு தான்” என்று சொன்னது பூனை. அப்படியே அந்த எலியையும் சாப்பிட்டு முடித்தது.


Franz Kafka A Little Fable “Alas,” said the mouse, “the whole world is growing smaller every day. At the beginning it was so big that I was afraid, I kept running and running, and I was glad when I saw walls far away to the right and left, but these long walls have narrowed so quickly that I am in the last chamber already, and there in the corner stands the trap that I must run into.”      “You only need to change your direction,” said the cat, and ate it up.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *