இரவு 1.
வளர மறுப்பேன்
இரவில் இமைகள் மூடும் போது உன் முகம்
காலையில் கண்களைத் திறக்கும் போதும் உன் முகம்
இருளில் உறங்கும் போது உன் நினைவே காவலாக
விடியலில் உன்னைக் காண்பேன் என்ற நம்பிக்கையில்
தூங்குகிறேன் உன் அணைப்பில்
எழுந்திடுவேன் உன் அருகில்
இரவென்றால் பயமென்பார்
எனக்கென்றும் இரவு தான்
உன்னுடன் இருக்கும் இனிமை
கதை கேட்டு மகிழ்வடைந்து
தாலாட்டில் கண்ணயர்ந்து
உன் அணைப்பில் துயில் கொண்டு…
ஓ உன் இரவு முத்தமும்
எழுப்பும் அதிகாலை முத்தமும்
என் தூக்கக் கலக்கத்தில்
மதுவின் போதையுடன் கலந்த
இனிமையாகவே தெரிகிறது
சோம்பலால் அல்ல
உன் மீதுள்ள
நேசத்தால் சொல்கிறேன்
தூக்கமே என் பொழுது போக்கு
உன் மடியே என் மெத்தை
என் விளையாட்டுத் திடல்