தீவே நீ தனியே இல்லை

யாரும் இங்கு தீவு இல்லை

பாலம் ஒன்று தேவையில்லை

தீவே நீயே வேறே இல்லை

 

அலையாய் மலையாய் நிலையாய்

இறைவன் ஒருவன் உண்டே

தீவே நீயே தனியே இல்லை

தீவே நியே தனியே இல்லையே

 

கண்ணுக்கெட்டும் தூரம் எங்கும்

நீலக் கடலின் அலைகள் நுரைகள்

காற்றின் சீற்றம் மேகக் கூட்டம்

கருமை வெறுமை நிறையும் தீவே

 

வண்ண வண்ண மீன்கள் உள்ளே

ஒன்றை ஒன்று சுற்றி நீந்தும்

காற்றில் நீந்தும் பறவை மீனைக்

கொத்திச் செல்லும் உலகம் உண்டே

 

No man is an Island

We are wired for each other

There’s an almighty God

Creator, Sustainer father

Father of the brothers and

the sisters and friends

No man is an Island

We are created for each other.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *