15.05.2017, சென்னை.
மேலே மேகம் இல்லை,
தரையில் தண்ணீரில்லை, நிலத்
தடியில் நீரும் இல்லை.
ஆனால் வானம் உண்டு,
பூமி உண்டு…
செஞ்சு வச்ச, சாமி உண்டு.
குடையை மடித்து,
செருப்பைத் துறந்து,
தெருவில் நின்று,
வானம் பார்த்து,
நிற்கின்றோம்…
மழையே வா மழையே வா
அழைத்தோம் வா…
பிழைப்போம் வா…
மழையே வா, மழையே வா…
பருவம் கடந்த பிழையாய் வா.
எரியும் வயிற்றில் பாலாய் வா, முன்
பிரிந்த மகவின் தாயாய் வா.
கருகிய பயிரின் உயிராய் வா
வெடிப்புகளுக்குள் பிசினாய் வா.
மழையே வா, மழையே வா…
அழையாமல் விருந்துக்கு வா.
பள்ளத் தாக்கு நிரப்ப வா
எதிரொளியாய் செஞ் ஞாயிறு தா.
தெங்கத்துள் இளநீராய் அடி
பம்பை ஒரு தண்மியாக்க வா.
மேலே மேகம் இல்லை,
தரையில் தண்ணீரில்லை, நிலத்
தடியில் நீரும் இல்லை.
ஆனால் வானம் உண்டு,
பூமி உண்டு…
செஞ்சு வச்ச, சாமி உண்டு.
உடம்பெல்லாம் தாகம் உண்டு
மனசெல்லாம் எதிர்பார்ப்பும் உண்டு.
நீல வானம் கருக்குமே,
அந்தக் கருமை பச்சையாகுமே…
எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இதில்
வாழ்க்கை பலநிறம் காட்டுதே….
மழையே வா.
——————-
பாஸ்டர் சுகுமாரின் ஜெபம்…. பாண்டிச்சேரி பணப் பிரச்சனை பின்னணி.