“இந்தியாவில இருக்கற எல்லா மாநிலத்து மக்களும் இருக்கற ஒரு டவுனுக்குப் போயிருந்தேன். ராத்திரி நான் மட்டும் ஒரு சர்ச்சுக்குள்ள தங்க வேண்டிய நிலைமை. எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. நானும் தூக்கம் வர்ற வரைக்கும் புத்தகம் வாசிச்சிட்டுப் படுத்துட்டேன். அடுத்த நாள் காலைல, ஒரு பக்கத்து கண்ணாடி ஜன்னல் உடைஞ்சு வெளில கிடக்குது. அதாவது உள்ளே இருந்து கல் எறிஞ்சா வெளில கண்ணாடி உடஞ்சு கிடக்கும் இல்லியா அதே மாதிரி. உள்ள ஒரு துண்டு கண்ணாடி கிடையாது. அதே சர்ச் ஆஃபீஸ்ல, நானும் இன்னொருத்தங்களும் கம்ப்யூட்டரப் பாத்துக்கிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துக்குள்ள நான் முதல்ல பாக்கறப்போ மாட்டியிருந்த சாக்கெட்ல இருந்து அடுத்த சாக்கெட்ல ப்ளக் இருந்துச்சு. அதே ஆஃபீஸ்ல கம்ப்யூட்டர் மானிட்டர் நகர்ந்து போனதப் பாத்ததா இன்னொருத்தர் சொன்னார். உள்ளூர் மக்கள், “இதெல்லாம் இங்க சகஜம்”
அப்படின்னாங்க. பிசாசு விரட்டுற ஊழியக்காரன்கள நான் பாத்திருக்கேன். பிசாசு பிடிச்சு சட்டையக் கிழிச்சுக்கிட்டு தெருவுல ஓடி, இப்போ நல்லா ஆகி, ஊழியக்காரங்களா ஆனவங்கள எனக்குத் தெரியும். துணி தீப்பிடிச்சு எறியறது, அசிங்கம் வீட்டுக்குள்ள வந்து விழுறது. ஓட்டு மேல கல்லு உழுறதுன்னு நிறைய நடந்திருக்கு. ஏதோ சத்தம் காதுக்குள்ள கேக்குது, கெட்ட கெட்ட சொப்பனமா வருது இப்படில்லாம் சொல்லிட்டு இருக்கறவங்க நிறைய பேர எனக்குத் தெரியும்.”
“சரி, நமக்கும் இந்த உண்மைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கு? அதாவது இதையெல்லாம் நம்ம வாழ்க்கையில எப்படி அப்ளை பண்ணப் போறோம்?”
“நாம கர்த்தரோட நெருக்கமா இருக்கறப்போ எதுக்கும் பயப்பட வேண்டியதோ, கவலைப்பட வேண்டியதோ இல்ல. நமக்கு நிச்சயமாத் தெரியாம பேய் விரட்டுறது, பேய் கிட்ட சவால் விடறது, கேள்வி கேக்கறது மாதிரி தேவையில்லாத விஷயங்கள்ல தலைய விடாம இருக்கறது நல்லது. யாருக்காவது பேய் பிடிச்சிருக்குதுன்னா, அதுக்காக நாம ஜெபம் பண்ணணும். பயப்படுறவங்களும், பலகீனமானவங்களும் தான் இதுல மாட்டிக்குவாங்க. குப்பை, அழுக்கு மாதிரி யாருக்குள்ள கெட்ட பழக்கங்களும், பாவங்களும் இருக்குதோ அவங்களையும் சாத்தான் நேரடியாவோ மறைமுகமாவோ தாக்குவான். மொத்தத்துல நாம இந்த உலகத்துல என்ன நோக்கத்துக்காக இருக்கிறோமோ அதை நிறைவேற்ற விடாமத் தடுக்கறதுக்கு பிசாசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வான். ஆனா கர்த்தரோட உத்தரவு இல்லாம அதுல எதுவும் நடக்காது. நாமளும் கர்த்தர்ட்ட நெருக்கமா இருந்தா அதுல இருந்து தப்பிக்கலாம்.”
“இயேசுவோட பிறப்புல இருந்து அவரோட சிலுவை மரணம் வரைக்கும் சாத்தான் என்னவெல்லாம் தலைகீழா நின்னு முயற்சி பண்ணினான்?”
“இப்போ தெரியுதா? சிலுவை உங்களுக்கு வேணாம்னு சொன்ன பேதுருவப் பாத்து இயேசு ஏன் அப்பாலே போ சாத்தானேன்னு சொன்னார்னு?”
“அவரு எதிரி மாதிரி பேசுனதுனால எதிரியேன்னு சொன்னார்னு நினைக்கிறேன். அதே மாதிரி தானே ‘யூதாசுக்குள்ள சாத்தான் புகுந்தான்’-னும் பைபிள்-ல சொல்லிருக்கு?”
“கல்லறைத் தோட்டத்துல இருந்த ஒரு பிசாசு பிடிச்சவனையும் இயேசு சாதாரண மனுஷனா மாத்தினாரு. அவன் புத்தி தெளிந்து, தன்னைத் தானே காயப்படுத்திக்கிட்டு, அதிக உடல் பலத்தோட, சங்கிலி விலங்குகள உடைச்சுப் போட்டுட்டு தனியாவே இருந்தான். இயேசு அவனுக்குள்ள இருந்த அசுத்த ஆவிகள பண்ணிக் கூட்டத்துல போக அனுமதி குடுத்தார். இன்னும் சிலருக்கு உடல்ல இருந்த சுகவீனம் சாத்தானோட அடிமைத்தனமா இருந்ததுன்னு சொல்லி சுகம் குடுத்தார். பல அசுத்த ஆவிகள மக்களுக்குள்ள இருந்து விரட்டிருக்காரு. மகதலேனா மரியாள் பல பிசாசுகள்ல இருந்து சுகப்பட்ட பெண். இப்படியே பல வகையான அசுத்த ஆவிகளோட பாதிப்புகள் பல விதங்கள்ல இருக்குது. அத விரட்டுறதும் பல விதங்கள்ல நடந்திருக்கு.”
“ஆமா, பிசாசுகளை விரட்டுன யூத மதத்து மக்களப் பத்தியும் பைபிள்ல எழுதியிருக்குது இல்லியா?”
“பவுலோட ஊழியத்துல பாக்கலாம், பழைய ஏற்பாட்டுல, புதிய ஏற்பாட்டுல எல்லாம் இந்த மாதிரி கர்த்தருக்கு சம்பந்தம் இல்லாதவங்க கூட ஆவிகளோட தொடர்பு வச்சிருந்தாங்க. மந்திரம் தந்திரம் எல்லாம் செஞ்சிருக்காங்க. ஆனா பைபிள் சொல்லுது, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை, மந்திரமும் இல்லைன்னு.”
“நம்ம சான்ட்ராவுக்கு சரியாயிருச்சா? இன்னும் அவளுக்கு நாம செய்ய வேண்டியது எதுவும் இருக்குதா?”
“எனக்குத் தெரியல. ஆனா ஒண்ணு நிச்சயம். அவள கர்த்தரோட தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள வைக்கணும். பைபிள், ஜெபம் எல்லாத்துலேயேயும் நம்ம அளவுக்காவது அவள வளத்து விடணும். ஒரு வேள அதுக்காகத் தான் கர்த்தர் நம்மள இந்த ஊருக்கு, லாக்டவுன்ல வர வச்சாரோ என்னவோ.”
“சான்ட்ரா இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டான்னு நினைக்கிறீங்களா?”
“நிச்சயமா சொல்ல முடியாது. சன்டே ஸ்கூல்ல விவரம் தெரியாம ஏதாவது செய்திருக்கலாம். நீ தான் கண்டு பிடிக்கணும். ஆனா இரட்சிக்கப்பட்டியா? அப்படின்னு நேரடியாக் கேட்டா அவளுக்குப் புரியாம போகலாம். இரட்சிப்புன்னா என்ன? அப்படின்னு அவளுக்கு சொல்லிக் குடுத்துட்டு, உனக்கு இந்த அனுபவம் இருக்குதான்னு கேக்கலாம். இல்லைன்னு சொன்னா, பிடிச்சு வச்சு அவளுக்கு விளக்கமா சொல்லிக் குடுத்துட்டு, அவ இரட்சிக்கப்பட்டுட்டான்னு உறுதியா தெரிஞ்சுட்டு, அப்புறமா அவளே ஒரு ஊழியக்காரி அளவுக்கு பைபிள ஸ்டடி பண்றதுலயும், ஜெபிக்கிறதுலயும் வளர வைக்கணும். நீ நல்லா ஜெபத்தோட, ப்ரிப்பேர் பண்ணு. அதே நேரத்துல சான்ட்ராவோட ஃபிலாசஃபி என்ன? வாழ்க்கையப் பத்தி அவ வச்சிருக்கிற ஐடியாக்கள் என்ன அப்படிங்கறத நல்லா பழகி தெரிஞ்சிக்கோ. அப்புறமா ஈசியா இருக்கும்.”
“கண்டிப்பா செய்யறேனுங்க. யாருக்குல்லாமோ நாம செய்யுறோம். நம்ம பிள்ளைக்கு செய்யறதுல என்ன. ஆனா நீங்க என்னால முடியாதப்போ எல்லாம் ஹெல்ப் பண்ணணும்.”
“நிச்சயமா. நானும் உனக்காக நல்லா ஜெபம் பண்ணிக்கிறேன்.”
செல்லராஜிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. “ப்ரோ, ஆன்ட்ரூ கொஞ்சம் கொஞ்சமா பைபிள்ல இன்ட்ரஸ்ட் காட்டுறான். நீங்க அவன் கூட வாரத்துக்கு ஒரு நாளாவது டைம் ஸ்பென்ட் பண்ணுனா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்.”
“ப்ரோ, அவன் உங்க கிட்ட தான் கொஞ்சம் ஓப்பனா பேசற மாதிரி இருக்குது. நான் சான்ட்ராவோட அண்ணன் அப்படிங்கறதுனால எங்கிட்ட நிச்சயமா உங்க கிட்ட இருக்கற அளவுக்கு க்ளோசா ஆகவே மாட்டான். உங்களுக்குத் தான் அவனப் பத்தியும் இன் அன்ட் அவுட் தெரியும். நான் உங்களுக்கு சில ஐடியாஸ் தர்றேன். அவன நம்ம வழிக்குள்ள கொண்டு வந்துறலாம்.”
“சரி, நாம ஒரு நாள் மீட் பண்ணணுமே?”
“வொய் நாட். இன்னிக்கே ஈவ்னிங் வெளில போலாம்.”