Month: July 2021

ஆன்ட்ரூ சொன்னபடியே படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டான். பெங்களூரில் அவனுக்கு நல்ல ஒரு ஆலயமும் நண்பர்களும் கிடைத்தார்கள். சன்டே ஸ்கூல், யூத் மீட்டிங் என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொண்டான். சான்ட்ராவுக்குத் தான் முடியவில்லை. இப்படி ஒரு சாமியாரப் போய் நானே ப்ரொப்போஸ் பண்ணுன மாதிரி…

“நீ ஜெபம் பண்ணு, உபவாசம் பண்ணு எதுனாலும் எனக்கு ஆட்சேபனை இல்ல. ஆனா மருந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும்.” “அப்பா, நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேட்டுட்டு சொல்லுங்க. நாம டாக்டரப் பாப்போம். அவருட்டயே கேப்போம். ஒரு நாள் மருந்து இல்லாம…

காலையில் இரவு முழுவதும் தூங்காத சான்ட்ரா பைத்தியம் பிடித்தது போல இருந்தாள். சிறு பிள்ளைகளிடம் கோபப்பட்டாள். கதவை மூடிக் கொண்டு அறைக்குள் கத்திக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அம்மா ஒப்பாரி வைக்கத் துவங்கிவிட்டார். காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவே அதிக நேரம் ஆனது. “திரும்பவும் பேய் பிடிச்சிருச்சு.”…

“அய்யய்யோ லேட் ஆயிருச்சே!” சான்ட்ரா தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்தாள். “உங்க வீட்டுல என்ன அந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்குதா என்ன?” “இல்ல, அதனாலத்தான் அந்த மரியாதையக் காப்பாத்திக்கணும்னு பதட்டமா இருக்கு.” “நான் வேணா உன்ன பைக்ல கொண்டு விட்டுறட்டுமா?” “எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா…

36. கர்த்தருக்கு சித்தமானால்… “நான் உனக்கு பண்ணுன ப்ராமிஸ்ஸ காப்பாத்திட்டேன். உனக்கும் சக்திக்கும் நடுவுல என்ன இருந்ததுன்னு என் வாயால யார்ட்டயும் சொல்லல. இப்போ சக்திக்கும் உனக்கும் நடுவுல எதுவுமே இல்லன்னு எனக்குத் தெரியும். நீ ஏன் என்ன ஏத்துக்கக் கூடாது?” “எனக்கும் சக்திக்கும் இப்பவரைக்கும் எதுவும்…

ஒரு வருடம் வேகமாக ஓடியது. அவன் கல்லூரியிலேயே சான்ட்ராவுக்கு இடம் கிடைத்தது. ஆன்ட்ரூவின் இரண்டாம் ஆண்டு பி ஜி வருடம், சான்ட்ராவின் பி.ஜி முதல் வருடத்துக்காக செலவானது. எம் ஃபில் படித்தால் தான் இன்னும் ஒரு வருடம் அவளுடன் கல்லூரி போக முடியும் என்பதால் நன்றாகவும் படித்தான்….

வழக்கம் போல ஆன்லைனில் செல்லராஜும் அலெக்ஸும் நடத்தும் வேதபாடம், ஜெபம் எல்லாம் தொடந்தன. அவ்வப்போது சான்ட்ராவின் கருத்துகளுக்கு ஆன்ட்ரூ லைக் போடுவான். ஒரு தடவை கஷ்ட்டப்பட்டு ஆன்ட்ரூ செய்திருந்த கமென்ட்டுக்கு சான்ட்ரா லைக் போட்டு, ‘ஆமென்’ என்று பதில் கமென்ட் போட்டது ஆன்ட்ரூவுக்குநம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சான்ட்ரா இரண்டாம்…

ஆன்ட்ரூவுக்கு முக்கிய செய்திகளைக் கொண்டு வந்தது நண்பன் செல்வம் தான். ஏற்கனவே கொரோனாவுக்காக லாக்டவுன் இருந்தாலும் கூட, ஊர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். சான்ட்ராவின் 18 ஆம் பிறந்த நாளில் அவளை பதிவுத் திருமணம் செய்வதாக சபதம் செய்திருந்த சக்திக்கு ஏற்பட்ட கோபம் வெறியாகத் திரும்பியது. இந்த…

வருடம் மிக வேகமாக ஓடிவிட்டது. சான்ட்ரா இப்போது இரண்டாம் ஆண்டு படிப்பை ஆன்லைனில் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். ஆன்ட்ரூ இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு தொடர்கிறான். பெரிதாக எந்த நிகழ்வும் இல்லை. சான்ட்ராவுக்கும் சக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலத் தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனாலும் சான்ட்ராவின்…

ஆன்லைன் வகுப்புகள் முடிந்து பரீட்சையும் முடிந்தது. சான்ட்ரா இப்போது கல்லூரிக்குப் போக வேண்டும். நீட் எழுதி டாக்டராகும் அளவுக்கு அவள் படிக்கிறவள் இல்லை. அதற்கான திறமை தனக்கு இருக்கிறதா என்று கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. அவளுக்கு சக்தியுடன் ஏற்பட்ட அனுபவங்களும், அது காதலா இல்லையா என்று…

Back to top