36. கர்த்தருக்கு சித்தமானால்…
“நான் உனக்கு பண்ணுன ப்ராமிஸ்ஸ காப்பாத்திட்டேன். உனக்கும் சக்திக்கும் நடுவுல என்ன இருந்ததுன்னு என் வாயால யார்ட்டயும் சொல்லல. இப்போ சக்திக்கும் உனக்கும் நடுவுல எதுவுமே இல்லன்னு எனக்குத் தெரியும். நீ ஏன் என்ன ஏத்துக்கக் கூடாது?”
“எனக்கும் சக்திக்கும் இப்பவரைக்கும் எதுவும் நடந்துட்டு இருக்கலாம். நீ எப்படி எதுவுமே இல்லன்னு சொல்ல முடியும்?”
“நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணுன மாதிரி இன்னொருத்தங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். உனக்கும் சக்திக்கும் இப்போ எதுவும் இல்லங்கறத, அந்த விஷயம் எனக்குத் தெரியுங்கறத உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நானும் ஒருத்தங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். அவங்க யாருன்னும் உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டாங்க.”
“சக்தி உனக்கு பண்ணுன ப்ராமிஸ், நீ அவனுக்கு பண்ணுன ப்ராமிஸ் ரெண்டுமே நடக்கல. இப்போ நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன். நீ எனக்கு ப்ராமிஸ் பண்ண முடியுமா?”
“ஏற்கனவே பண்ணுன ப்ராமிஸ்ல நான் நொந்து போய் இருக்கேன். இனி எந்த பிராமிஸ்ஸும் அவசரப்பட்டு பண்றது இல்லன்னு முடிவு பண்ணிருக்கேன். அப்படின்னாலும், ‘கர்த்தருக்கு சித்தமானா’ அப்படின்னு தான் சொல்லப் போறேன்.”
“அப்படியாச்சும் ப்ராமிஸ் பண்ணேன்… ப்ளீஸ்.”
“ஆன்ட்ரூ, உன்ன மாதிரி எனக்கு எந்த அவசரமோ தேவையோ இல்ல. நான் தனியாவே சாகற வரைக்கும் இருக்கறதுக்கு என்ன அப்பவே ரெடி பண்ணிட்டேன். போதும் ஒரு தடவ பண்ணுன தப்பு. ரெண்டாவது அதே தப்ப பண்ற அளவுக்கு முட்டாள் இல்ல நான்.”
“சரி உன்னோட முடிவ சொல்லிரு. நான் ஏத்துக்குறேன். ஆனா சாகற வரைக்கும்னாலும் உனக்காகத் தான் நான் காத்துட்டு இருப்பேன்.”
“ஆன்ட்ரூ, நானும் நிறைய யோசிச்சுப் பாத்துட்டேன். நிறைய பேர்ட்ட கேட்டுட்டேன். பைபிள்ல, நெட்ல, புக்ஸ்ல எல்லாம் தேடிப் படிச்சு, ரிசர்ச் செஞ்ச மாதிரி எல்லாம் முடிச்சுட்டு தான் உங்கிட்ட பேசுறேன்.”
“எல்லாரும் நோ சொல்லத்தான் சொல்றாங்களா? கர்த்தருக்கு சித்தமானா அப்படின்னு சொல்லியாச்சும் ப்ராமிஸ் பண்ணேன்.”
“அதுவும் ஒரு ஆன்ட்டி சொன்னது தான். ‘ரெண்டு பேர், கிறிஸ்டியன் விசுவாசிங்க லவ் பண்ணுனாங்கன்னா. அவங்க ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம, எந்த தொடர்பும் இல்லாம இருக்கணும். கர்த்தரா பாத்து அற்புதமா அவங்கள சேர வச்சார்னா நல்லது. அல்லது பிரிஞ்சு போயிறணும்’னு சொன்னாங்க.”
“அவங்கல்லாம் கிழவிங்க, வாழ்ந்து முடிச்சவங்க. இந்தக் காலத்தப் பத்தி ஒண்ணும் தெரியாதவங்க சான்ட்ரா. எனக்கும் அட்வைஸ் பண்ணுனவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லட்டுமா? கொஞ்சமாவது சென்சிபிளா பேசு சான்ட்ரா. கடவுள் செய்வாரு, அவரோட சித்தம் நடக்கணும்னுட்டு நாம சும்மா இருக்க முடியாது இல்லியா? சும்மா இருக்கக் கூடாது இல்லியா? நம்ம பார்ட்ல நாம என்ன செய்யணுமோ அதச் செய்யத்தானே செய்யணும்?”
“என்னோட பார்ட்டையும் சேத்து நீயே செஞ்சிருவ போல இருக்கே? ப்ளீஸ் ஆன்ட்ரூ, என்னப் புரிஞ்சுக்கோ. நான் உன்ன வெறுக்கல… நோ சொல்லல.”
“ஆனா நேசிக்கவும் இல்ல, யெஸ் சொல்லவும் இல்ல அப்படித்தானே? கெஞ்சிக்கிட்டே இருந்தா மிஞ்சிட்டே போவ அப்படித்தானே? சான் ட் ரா என்னோட லவ் எந்த அளவுக்கு உண்மையானது அப்படிங்கறத என்னால உனக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியல.”
“என்ன கில்ட்டியா ஃபீல் பண்ண வச்சு உன் ஆசைய நிறைவேற்றலாம்னு பாக்குறியா? சாரி, ஆன்ட்ரூ ஒவ்வொருத்தருக்கும் சுதந்தரம்னு ஒண்ணு இருக்கு. எனக்கு இந்த மாதிரி எந்த ஃபீலிங்கும் இல்ல. இதுக்கு மேல என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ.”
“நான் அப்படி ஒண்ணும் அரக்கன் இல்ல. இனிமேல் உன் பக்கம் வந்தேன்னா அப்புறமா சொல்லு.”
“இங்கப் பாரு ஆன்ட்ரூ, நாம ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸ். எப்படியும் ஃபேமிலி ஃபங்க்ஷன்ஸ்ல மீட் பண்ணித் தான் ஆகணும்.”
“”அதான் நாம ரெண்டு பேரும் மீட் பண்ற ஃபேமிலி ஃபங்ஷனுக்காகத் தான் இப்படி நான் உங்கிட்ட ஆர்க்யு பண்ணிட்டு இருக்கேன்”
சான்ட்ரா வாய் விட்டு சிரித்துவிட்டாள்.
அவர்கள் இருவரும் சிரித்து முடிக்க இரண்டு நிமிடங்கள் ஆகின. அது அவர்களுக்கு நடுவே இருந்த இறுக்கமான நிலையை சிறிது தளரச் செய்தது.
“நீ கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”
“அப்படின்னா உனக்கு கல்யாணமே ஆகாது.”
“பரவால்ல, இப்படி அடிக்கடி மனம் விட்டு பேசிட்டு இருந்தாலே போதும்னு நினைக்கிறேன்.”
“வயசான கிழவன் கிழவியாத் தான் நாம பேசி சிரிச்சுட்டு இருப்போம்.”
“அப்பக் கூட உனக்கு மனசு மாறிடுமான்னு நினைச்சு, ஹோப்போட காத்துட்டு இருப்பேன்.”
“ஆன்ட்ரூ, ஆன்ட்ரூ, நீ ஏன் இப்படி பைத்தியமா இருக்கிற?”
“அந்த பைத்தியத்த தெளிய வையேன்?”
“சுத்தி சுத்தி அதே பேச்சு தானா?”
“அது நடந்துருச்சுன்னா நான் ஏன் அதப்பத்தி பேசிட்டே இருக்கப் போறேன்.”
சுண்டல்காரர் ஒருவர் வரவே இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கி இருவரும் ஒவ்வொரு சுண்டலாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது தெரியவில்லை. இருவருமே இன்றோடு ஏதாவது ஒரு முடிவுடன் திரும்ப வேண்டும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் இருவருமே எதிலும் விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். சான் ட் ரா தன் மொபைல் ஃபோனைத் திறந்து நேரம் என்ன என்று பார்த்தாள்.