
(Disclaimer:
இது ஜெசுவடியான் சில்வஸ்டர் பற்றியது அல்ல. அரசியலும் அல்ல. Theology யும் அல்ல. Philosophy யும் அல்ல. ஒரு multi layered, minimalistic parable.
உங்கள influence பண்ண அல்ல, inspire பண்ண. Intimidate பண்ண அல்ல ignite பண்ண. Prophecy அல்ல ஒரு parable.)
ஒருத்தன் நான் தான் வடை என்றான்
இன்னொருத்தன் வடை என்று ஒன்று இல்லை என்றான்
வடை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் விளக்கினான் ஒருவன்
துப்பாக்கி இல்லாமல் மீடியாவில் வடை சுட்டுக் கொண்டிருந்தான் ஒரு டீக்கடை ஊழியன்
நல்ல வடையை குறைந்தவிலையில் விற்றுக் கொண்டிருந்தான் ஒரு ரோட்டுக்கடை ஏழை.
மோசமான வடையை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான் ஒரு கார்ப்பரேட் முதலை
என்ன வடையை யார் எப்படி சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டான் ஒரு அதிகாரி
வடை என் பிறப்புரிமை என்று சத்தம் போட்டான் ஒரு போராளி
உளுந்த வடை கேட்ட ஒருவனுக்கு பருப்பு வடையை ஊதிக்கொடுத்தான் ஒரு அறிவாளி
ஊழ்ந்த வடை வேணாம்ப்பா என்றவனுக்கு எண்ணெய் சட்டியிலிருந்தே நேரடியாக உளுந்த வடையைக் கொடுத்தான் ஒரு இடும்பாளி
வட தின்னா உன் சோலி முடிஞ்சுது எச்சரித்தான் ஒரு அண்ணாச்சி
வட போச்சே ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தான் ஒரு ஏமாளி
வடையை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் ஒரு படைப்பாளி.
(படத்தில் இருப்பது சிவகாசி போகும் வழியில் ஒரு ரோட்டுக்கடையில் கிடைத்த கேழ்வரகு வடை)