Author: micyelw3bmN

“ப்ரதர் பைபிள விட்டுட்டுப் போயிட்டாரு.” “இப்படிக் குடு. ஏதாச்சும் ஆவிக்குரிய பாடம் படிச்சுக்கலாமான்னு பாக்கலாம்.” “அடுத்தவங்களோட விஷயங்களப் படிக்கறது நல்ல மேனர்ஸ் இல்லியே?” “அடுத்தவங்க பைபிளப் படிக்கலாம். அதுவும் ஃபேமசானவங்களோடத வாசிக்கறது தப்பே இல்ல. இதுல அவங்க குறிச்சிருக்கறது தான் அப்புறமா பிரசங்கமா வரும், அல்லது புத்தகமா…

சான்ட்ரா உறுமினாள். வயதான ஊழியர் அவள் நெற்றியில் பைபிளை வைத்துத் தொட்டு ஜெபம் செய்ய அவள் படுக்கையில் விழுந்து அமைதியானாள். அதே நேரம் பென்னி க்ரஹாம் முகம் சீறியது. ஏதோ கரகரப்பான குரலில் பேசினார். பெரியவரை நோக்கி தாக்குவது போல வேகமாகப் போனார். பெரியவர் சான்ட்ராவுக்கு செய்தது…

“என்னங்க, எனக்கு நீங்க பணம் குடுக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா நீங்க எப்படி இதுக்கு சம்மதிக்கிறீங்கன்னு தான் எனக்குப் புரியல.” “நான் நம்புறேனோ இல்லியோ, அம்மா நம்புறாங்க. வயசானவங்களுக்கு டிஸ்ட்டில்ட் வாட்டர் ஊசி போடுறாங்க இல்லியா? சில பேருக்கு தாயத்து இருக்குது இல்லியா? அது மாதிரி…

“ஹலோ, நான் பென்னி க்ரஹாம் பேசறேன். பெரும் வல்லமை ஊழியங்கள்ல இருந்து.” லீலா அம்மாவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. டிவியில் பெரும் வல்லமை ஊழியம் நிகழ்ச்சியில், சினிமா ஹீரோ மாதிரி ஸ்டைலாக பிசாசு ஓட்டுவதும், ஸ்லோமோஷனில் அவர் அசைவுகளும் பல மதங்களில் உள்ள பலருக்கு ஒரு…

காலை நேரத்திலேயே, சமையலறையில் பெரிய கலாட்டா நடப்பது கேட்டது. அலெக்சான்டர் என்னவென்று போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது அது அவன் அம்மாவுக்கும் பாத்திரம் தேய்க்கும் பெண்ணுக்கும் நடந்த சாதாரணமான உரையாடல் என்பது தெரிந்தது. அம்மா அப்பாவை சத்தமாக அழைத்ததும் அவர் பதிலுக்குத் திட்டிக் கொண்டே வந்ததும்,…

சான்ட்ராவுக்கு மீண்டும் அசுத்த ஆவியின் தாக்குதல் ஏற்பட்டது. அவள் அப்பாவின் கூற்றுப்படி அவளுக்கு மீண்டும் மனநிலையில் ஏதோ பிரச்சனை. குணா மனநல மையத்தில் தான் இப்போது அலெக்சான்டர் தன் லேப் டாப்புடன் உட்கார்ந்திருக்கிறார். அம்மாவும் கூடவே இருக்கிறார்கள். அப்பா இந்த தடவை சான்ட்ரா மருத்துவமனையில் இருப்பதை மிகவும்…

சரியாக ஒரு மாதம் பெரிய சம்பவங்கள் இல்லாமல் கடந்து போயின. ஆன்ட்ரூவுக்கு நெகடிவ் என்று ரிப்போர்ட் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதிகம் அவனே வெளியே போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறான். செல்லராஜ் தான் அவ்வப்போது அவனை வந்து பார்த்து, புரோட்டின் அதிகம் உள்ள பல உணவுப்…

அலெக்சான்டர் சி சி டிவி கேமராக்களை வீட்டைச் சுற்றி பொருத்தியது எல்லோருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது. “ஏம்ப்பா நாம என்ன கோடிக்கோடியா வீட்டுக்குள்ள வச்சிருக்கோமா? அல்லது நாம என்ன பெரிய கவர்னர் வீட்டு பரம்பரையா?” “நம்ம மதிப்பு நமக்கே தெரியலன்னா, நாம இந்த உலகத்துல இருக்கறதுலயே அர்த்தம்…

Zoom மீட்டிங் ஒழுங்காக புதன் கிழமைகளில் நடந்தன. செல்லராஜ், அலெக்சான்டர், லீலா அத்தை, எலிசபெத் அம்மா, ஆன்ட்ரூ, சான்ட்ரா, இன்னும் சில உறவினர்கள் என்று அவ்வப்போது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக்கொள்ளவும் உதவியாக இருந்தது. செல்லராஜும் அலெக்சான்டரும் தான் ஒருவாரம் விட்டு…

ஜெபப் பூங்கா கூட்டம் குறைந்து தான் இருந்தது. கொரோனா பயத்தால் பலர் வரவில்லை. வந்தவர்களும் சிலர் தனியாகவும் ஒன்றிரண்டு பேராகவும் முகக்கவசமும், திறந்த வேதபுத்தகத்தின் முன் உட்கார்ந்தும் முழங்காலிட்டும் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் பாடியது முகக்கவசத்தின் வழியாக ஏதோ முனகுவது போலக் கேட்டது. லீலா அம்மாவும்…

Back to top